அரசியல் கைதிகள் தொடர்பில் மகிந்த வெளியிட்ட அதிர்ச்சித்தகவல் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, February 10, 2021

அரசியல் கைதிகள் தொடர்பில் மகிந்த வெளியிட்ட அதிர்ச்சித்தகவல்

இலங்கை சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளாஇ பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ரா.சானக்கியன், நாட்டில் சிறைச்சாலைகளில் சிறைக்கைதிகள் எத்தனைபேர் இருக்கின்றனர்?, நாட்டில் இருக்கும் இராணுவ முகாம்கள், சிறைக்கைதிகளை விடுவிக்க இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மற்றும் பாதுகாப்பு பிரிவினரிடமிருக்கும் தனியாருக்கு சொந்தமான காணிகளின் பிரமானம் தொடர்பாக வினவியபோது , பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் , இலங்கையின் தண்டனைக்கோவைச்சட்டம் அல்லது நாட்டில் செயற்பட்டுவரும் வேறு எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் விளக்கமறியல் கைதிகள் அல்லது சிறைக்கைதிகளில் அரசியல் கைதிகள் என யாரும் இலங்கை சிறைச்சாலைகளில் இல்லை என்றும் அவர் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் மாவட்ட மட்டத்தில் இராணுவத்தினருக்கு இருக்கும் காணி அளவு தொடர்பில், தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு பதில் வழங்க முடியாது என பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றதாகவும் மகிந்த கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத்தொடர்ந்து தனியாருக்கு சொந்தமான காணிகள் பாதுகாப்பு பிரிவுக்கு கீழ் தொடர்ந்து இருப்பது தொடர்பாக பிரதமருக்கு பதிலாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பதிலளிக்கையில்,

யுத்தத்துக்கு பின்னர் வடக்கு கிழக்கில் அரச மற்றும் பொது மக்களுக்கு சொந்தமான 97 வீதமான காணிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. தேசிய பாதுகாப்புக்காகவே எஞ்சிய வீதத்தினை வைத்திருக்கின்றோம். தேசிய பாதுகாப்புக்கு பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் காணிகள் தொடர்பில் யாருக்கும் கேள்வி எழுப்ப முடியாது

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.