கணபதிபுர புலமையாளர்கள் நால்வருக்கு துவிச்சக்கரவண்டிகள்! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, April 7, 2021

கணபதிபுர புலமையாளர்கள் நால்வருக்கு துவிச்சக்கரவண்டிகள்!

 


அம்பாறை மாவட்ட சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இம்முறை புலமைப்பரிசில்பரீட்சையில் சித்தியெய்திய நான்கு மாணவருக்கு 04துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.

மாணவர்களான ரவிக்குமார் யதுர்ஜிகா, ரமணன் றஷானி, குணாளன் யதுர்மிஷா, ஜிவாகரன் டிலுக்ஷன் ஆகிய நான்கு புலமையாளர்கள் துவிச்சக்கரவண்டிகளைப் பெற்றுக்கொண்டனர்.

ஜக்கியஇராச்சியத்தின் சிறுவர் வறுமை ஒழிப்பு நிதியத்தின்() நிதியுதவியில் புனர்வாழ்வும் புதுவாழ்வும் ஸ்ரீலங்கா () அமைப்பு இதனை வழங்கிவைத்தது.

இந்த நிகழ்வு கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் அதிபர் எஸ்.கிருபைராஜா தலைமையில் நேற்றுமுன்தினம் கோலாகலமாக நடைபெற்றது.

புனர்வாழ்வும் புதுவாழ்வும் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் பொறியியலாளர் ஹென்றிஅமல்ராஜ், திருமதி ஆனந்தி ஹென்றிஅமல்ராஜ் ஆகியோர் கௌரவஅதிதிகளாகக்கலந்துகொண்டனர்.

பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்துசிறப்பித்தார்.சிறப்பதிதிகளாக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் ,கோட்டக்கல்விப்பணிப்பாளர் எ.சபூர்தம்பி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரத்தியேகவகுப்போ ஏனைய வசதிகளோ இல்லாத மிகவும் பின்தங்கிய இப்பிரதேசத்தில் ,இந்தமாணவர்களைப்பயிற்றுவித்த வகுப்பாசிரியை திருமதி விஜயலதா இராமச்சந்திரன் அதிதிகளாலும் பெற்றோராலும் வெகுவாகப் பாராட்டிக்கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.