கேரளாவில் களத்தோடை பகுதியில், இருக்கும் நீர்நிலைகளில் பள்ளி மாணவர் ஒருவருக்கு சிவப்பு காது ஆமை ஒன்று கிடைத்துள்ளது.
இது குறித்து, அந்த மாணவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சந்தீப் தாஸ், அந்த ஆமையை மீண்டும் நீர் நிலைகளில் விட வேண்டாம் என எச்சரித்துள்ளார். அதற்கான காரணமும் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவைப் வாழ்விடமாக கொண்ட சிவப்புக் காது ஆமைகளின் அறிவியல் பெயர் Trachemys Scripta Elegans. இவை செல்ல பிராணியாக வளர்க்கப்படும் இந்த ஆமைகள் அழகிய வண்ணமும், சிறிய தோற்றமும் உடையது.
ஆனால், இந்த ஆமைகளின் வளர்ச்சி இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்காது. இந்த சிவப்புக் காது ஆமைகள் நம் நாடு ஆமைகளின் உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment