கட்டுநாயக்க விமான நிலைய பதில் மேலாளருக்கும் கொரோனா; வீட்டிற்கு அனுப்பப்பட்ட ஊழியர்கள்.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

புதன், 6 ஜனவரி, 2021

கட்டுநாயக்க விமான நிலைய பதில் மேலாளருக்கும் கொரோனா; வீட்டிற்கு அனுப்பப்பட்ட ஊழியர்கள்..

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பதில் மேலாளரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 15 க்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் தங்கள் வீடுகளை தனிமைப்படுத்த அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மத்தள விமான நிலையத்தில் நடைபெற்ற உக்ரேனிய பிரஜைகளுக்கான வரவேற்பு நிகழ்வில் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டதாக விமான நிலைய வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட விமான நிலைய ஊழியர்கள் இன்னும் ஏழு நாட்களில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று விமான நிலைய சுகாதார அலுவலர் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.