வேலுநாச்சியார் பயோபிக்கில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார்.
பாகுபலி படத்துக்கு பிறகு சரித்திர கதையம்சம் உள்ள படங்கள் அதிகம் தயாராகின்றன. மணிரத்னம் பொன்னியின் செல்வன் வரலாற்று கதையை படமாக்கி வருகிறார்.
ராமாயண காவியம் பிரபாஸ், சயீப் அலிகான் நடிப்பில் ஆதிபுருஷ் பெயரில் உருவாகிறது. ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கை மணிகர்னிகா பெயரில் கங்கனா ரணாவத் நடிக்க வெளியானது. மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் நடிப்பில் சரித்திர படங்கள் வந்துள்ளன.
இதேபோல், 17-ம் நூற்றாண்டில் சிவகங்கை பகுதியில் ஆட்சி செய்து ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் வாழ்க்கை சினிமா படமாக தயாராவதாகவும், இதில் வேலுநாச்சியார் வேடத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நடிகை நயன்தாரா இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக நயன்தாராவின் பிஆர்ஓ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நயன்தாரா வேலுநாச்சியார் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக வெளிவரும் செய்திகள் உண்மையில்லை எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
No comments:
Post a Comment