ஒரு குடும்பத்தை பலி கொண்ட கண்டி-பூவெலிகட கட்ட டம் இடிந்து விழுந்ததற்கான காரணம் வெளியா கியுள்ளது.
கண்டி- பூவெலிகட பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் கடந்த செப்டெம்பர் மாதம் இடிந்து விழுந்தமைக்கு இயற் கை யின் காரணமாக அனர்த்தம் ஏற்படவில்லை என்ப தோடு கட்டட நிர்மாணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தவறான தீர்மானங்கள் மற்றும் தரமற்ற பொருட்களை உபயோகித்தமையே காரணம் என தெரியவந்துள்ளது.
கண்டி- பூவெலிகட பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் கடந்த செப்டெம்பர் மாதம் இடிந்து விழுந்தமைக்கு இயற்கை காரணங்களோ காலநிலையோ பாதிப்பு செலுத் தவில்லை எனவும் நிர்மாணப்பணிகளின்போது எடுத்த தவறான தீர்மானங்களே இதற்கு காரணம் என, சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான 24 பக்கங்கள் அடங்கிய விசாரணை அறிக்கை குறித்த குழுவினால் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகேவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பஸ்நாயக்க நிலமே ஒருவருக்குச் சொந்தமான குறித்த 5 மாடிக் கட்டடம் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி இடிந்து வீழ்ந்தமையை அடுத்து அதிலிருந்த தாய், தந்தை மற்றும் பிறந்த 50 நாட்களான குழந்தை ஆகியோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment