நாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் பொருத்தப்பாடு குறித்து ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. Folk Lore என்ற கூட்டுச்சொல் உணர்த்தும் பொருண்மைகள் நாட்டார் வழக்காறு (வழக்காற்றியல் என்ற பதங்களைத் தவிர்த்து வேறு எந்தத் தமிழ்ச் சொல்லும் எவ்விதத்திலும் உணர்த்தவில்லை எனத் தே.லூர்து அவர்கள் கூறுவது இங்கு மனம் கொள்ளத் தக்கது.
19ம் நூற்றாண்டைச் சேர்ந்த அறிஞரான வில்லியம் ஜோன் தோமஸ் Popular antiquities என்ற இலத்தின் பதத்திற்கு மாற்றீடாக Folk Lore என்ற தொடரை உருவாக்கினார்.விவசாய வகுப்பினரின் மரபுகளிலும் பழங்கால பண்பாடுகளிலும் எஞ்சி நிலைத்து நிற்கும் அறிவு பூர்வமான எச்சங்களைக் குறிப்பிட அப் பதத்தினை உருவாக்கினார். இத் தொடரில் வருகின்ற Folk Lore என்பது நாட்டார் என்ற பொல்லுக்கு மாற்றீடாகப் பயன் படுத்தப்படுகின்றது. நாட்டார் என்பது கலைச்சொல்லாக மற்றைய சொற்களில் குறிப்பாக ஆங்கில எழுத்துப் பாரம்பரியத்தில் குழடம என்பதற்கான தமிழ் வடிவமாகும். மூல மொழியில் Folk எவற்றை எல்லாம் குறிக்கின்றதோ அவற்றை நாட்டார் சொல்லுக்கு மாற்றி விடுகின்றோம் என்பார் கா.சிவத்தம்பி அவர்கள். Folk என்பது ஜேர்மனியில் சாதாரண மக்கள் அனைவரையும் குறிக்கும்.
நாட்டாரியல் என்றால் என்ன என்பதற்கு மேலை நாட்டு, இந்திய ஆய்வாளர்கள் பல்வேறு வரைவிலக்கணங்களை வழுங்கியுள்ளனர்.இவ் வரைவிலக்கணங்கள் யாவும் முழுமையான பொருத்தப்பாடுடையவை என்று கூறமுடியாது.மேலை நாட்டு ஆய்வாளரான ஸ்ரீபன் பியூஸ் என்பவர் தனக்கு முன்னும் பின்னும் வரைவிலக்கணப் படுத்தியோரின் வரைவிலக்கணங்களிலிருந்து தொகுத்து திருப்தி அளிக்கக் கூடிய வகையில் சிறந்த முறையில் வரையறை ஒன்றைச் செய்துள்ளார்.
“நாகரிக வளர்ச்சி பெற்ற மக்களிடையே எச்சசொச்சங்களாக நிலவும் பண்டைய நம்பிக்கைகள் வழக்கங்கள் பற்றிய அறிவியலே நாட்டாரியல் என்னும் பயில் துறையாகும். அதாவது சாதாரண மக்களின் புராதன ஒழுகலாறுகள்இவழக்கங்கள் முதல் அவர்களது கருத்துக்கள், நம்பிக்கைகள் பாரம்பரியங்கள், மனச்சாய்வுகள் வரையுள்ள சகலவற்றையும் அது உள்ளடக்கியிருக்கும்.நாட்டார் கதை, நாட்டார் பாடல், கட்டுக் கதைகைள் ஐதீகங்கள், பழமொழிகள் விடுகதைகள் நாட்டாரிசை நாட்டார் நடனம் என்பவற்றுடன் நாட்டார் கூத்தும் நாட்டாரியலில் அடங்கும் கூறுகளாகும். பெரு ம்பாலும் இத்துறைகள் யாவும் வாய்மொழியாகவே அமைந்து காணப்படும் என்று கூறுகின்றார்.
ஸ்ரீபன் பியூஸ் என்பவருடைய வரைவிலக்கணத்தை அடி;படையாகக் கொண்டு ஜோனாஸ் பாலிஸ் என்பவர் தனது வரைவிலக்கணத்தை பின்வருமாறு அமைத்துக் கொண்டார்.
“நாகரிகம் வாய்ந்த மக்களின் மரபுவழி சார்ந்த படைப்புக்களும் தொல்குடி மக்களின் மரபுவழிப்பட்ட படைப்புக்களும் நாட்டார் வழக்காற்றியலாகும்.இவை ஒலிகளையும் செய்திகளையும் ஒரு வித ஓசை நயத்திற்கும் உரை நடைக்கும் உட்படுத்தி அமைக்கப்பட்டவையாகும்.. மேலும் மக்களின் நம்பிக்கைகள்இ பழக்கவழக்கங்கள் நிகழ்த்துதல்கள் நடனம் நாடகங்கள் முதலியனவும் இதற்குள் அடங்கும்.என்கிறார்.”
Folk Lore என்பது மக்களால் பரம்பரை பரம்பரையாக மரபு வழி உண்டாக்கப்பட்ட ஆக்கங்கள் எனவும் எழுத்துருவம் இல்லாத மொழிகளைக் கொண்ட மக்களிடையே காணப்படுவனவெல்லாம் அதனுள் அடங்கும் எனவும் புராணங்கள், நாட்டுப்பாடல்கள் விடுகதைகள் கதைகள் போன்றனவும் மக்களிடையே காணப்பட்ட பண்பாட்டின் ஒரு பகுதியாக விளங்குவன எனவும் அறிஞர்களால் விளக்கப்படுகின்றன. மரியா லீச் என்பவர் இதனடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு விளக்குகின்றார்.
“நாட்டுப்புற மக்களின் வழக்கக்கங்கள், நம்பிக்கைகள், மரபுகள் கதைகள், கதைசார் பழமொழிகள், விடுகதைகள் ஆகியவற்றையும் தனிமனிதர்களின் கூட்டு முயற்சியையும்; குறிப்பதோடு மாற்று வடிவங்களும் மீண்டும் மீண்டும் வருதலாகிய பண்புகளையும் குறிப்பதே நாட்டாரியலாகும் என்று கூறுகின்றார்.
மேல் நாட்டறிஞர்கள் மட்டுமன்றி தமிழறிஞர்களும் நாட்டடாரியலை வரைவிலக்கணப்படுத்தியுள்ளனர்.
ஒரு நாட்டு மக்களின் வழக்கங்கள் நாகரிகத்தைஇ பண்பாட்டை பழக்க வழக்கங்களை வரலாற்றை நாட்டு நடப்பை உண்மையான முறையில் படம் பிடித்துக் காட்டுவதே நாட்டாரியலாகும் இது மக்களின் மரபு வழிப்பட்ட படைப்புக்கள் (Traditional Creation) என்பார் டாக்டர் சு. சக்திவேல் ஒர் இன மக்களின்வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கும் அம்மக்களின் உள்ளார்ந்த பண்புகளை விளங்கிக கொள்வதற்கும் நாட்டுப்புறவியல் பெருந்துணை செய்கின்றது.என பேராசிரியர் பாண்டுரங்கன் கூறுகின்றார்.
எனவே Folk Lore என்னும் சொல் நூற்றாண்டு பழமை வாய்ந்ததெனினும் அதன் பொருள் குறித்து கருத்தொற்றுமை எற்படவில்லை. மரபுகள் தலைமுறை தலைமுறையாக நினைவுகூர்தல் மூலம் பாதுகாக்கப்படுகின்றன என்றும் வழக்கங்கள் நம்பிக்கைகள் சடங்குகள் நாட்டுப்புற இலக்கியங்கள் ஆகியவை பற்றி ஆராய்வதே இவ்வியல் என்றும் இவ்வழக்காறு கிராமப்புற மக்களிடமன்றி நகர்ப் மக்களிடமும் நிலவுகின்றன என்பதால் அவை பற்றி ஆராய்வதும் நாட்டாரியல் என்று ஸ்ரித் தோம்சன் கூறுகின்றார்.சுருக்கமாகக் கூறினால் நாட்டாரியல் மக்களின் மரபுவழிப்படட படைப்புக்களை அறியுந்துறை என்று கூறலாம்.
- ஆக்கம் -கோடிஸ்வரன் - BA.Hons (Tamil Specialist)
No comments:
Post a Comment