புதிய பிரேரணையில் இலங்கை குறித்து கவனம் செலுத்தப்படும் – பிரித்தானியா - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, February 22, 2021

புதிய பிரேரணையில் இலங்கை குறித்து கவனம் செலுத்தப்படும் – பிரித்தானியா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணை, இலங்கை குறித்து கவனம் செலுத்

க்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணை, இலங்கை குறித்து கவனம் செலுத்தும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் பேரவையின், 46 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமான நிலையில், ஆரம்ப அமர்வில் உரை நிகழ்த்திய பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டொமினிக் ராப் இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்காக, இலங்கை குறித்து பிரித்தானியா ஒரு புதிய பிரேரணையை முன்வைக்கும்.

மனித உரிமைகளை மீறுபவர்களைக் கணக்கிடும் ஒரு திறனுள்ள சர்வதேச மனித உரிமை அமைப்பைக் காண விரும்புகிறோம்.

மனித உரிமைகள் பேரவை, அதன் பங்கை முழுமையாக ஆற்றத் தயாராக இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால், அதன் நற்பெயர் மிகவும் பாதிக்கப்படக்கூடும் என தாம் அஞ்சுவதாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் தனது உரையில் கூறியுள்ளார்.

கனடா, ஜேர்மனி, வடக்கு மஸிடோனியா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான இணைத் தலைமை நாடுகள் குழு, இலங்கை குறித்த புதிய பிரேரணையை முன்வைக்கவுள்ளன.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கவுள்ள பிரேரணை தொடர்பாக, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடியுள்ளது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் கொழும்பில் நேற்று சந்தித்துள்ளனர்.

இதன்போது குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.