சம்மாந்துறையில் மாணவர்கள் பரபரப்பு ... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, January 19, 2021

சம்மாந்துறையில் மாணவர்கள் பரபரப்பு ...


சம்மாந்துறையில் மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து பெற்றோர் பாடசாலையை முற்றுகையிட்டு மாணவர்களை அழைத்துச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அம்பாறை – சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் இன்று காலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள பாடசாலைக்கு சுகாதார அதிகாரிகள் வருவதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து பாடசாலைக்கு படையெடுத்த பெற்றோர்கள், தமது பிள்ளைகளை பாடசாலையில் இருந்து விடுமாறும் பிசிஆர் எடுக்கவேண்டிய தேவையில்லை எனவும் அதிபர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாடசாலையில் அப்படியான நடவடிக்கை எடுக்கப்படவில்லையென தெரிவித்த அதிபர்கள், இது ஒரு வதந்தி எனவும் தெரிவித்தனர்.
எனினும் பெற்றோர்கள் அதிபர்களின் பேச்சை பொருட்படுத்தாது தமது பிள்ளைகளை பாடசாலையில் இருந்து அழைத்துச் செற்றுள்ளதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.