அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.
இதன் காரணமாக ராஜகிரிய, களனி மற்றும் களுபோவில ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படையினரின் முகாம்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த முகாம்களில் சேவையில் ஈடுபடும் 10 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன் கொள்வனவிற்காக பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றமையினாலேயே இவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment