பொரளை - ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 8 குழந்தைகளும் தாய்மார் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 24 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனைகளுக்குரிய அறிக்கை இன்றைய தினம் கிடைக்கப்பெற்றதற்கமையவே இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் குறித்த வைத்தியசாலையில் குழந்தை ஒன்றுக்கும் தந்தை ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment