போதை பொருள் வழக்கு.. அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை..! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

போதை பொருள் வழக்கு.. அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை..!

கன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துவத்தி வருவதாகவும், பலரும் போதை பொருள் விற்பனை செய்யும் மாபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, 2 நாட்கள் இந்திரஜித் லிங்கேஷிடம் மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்தியதை தொடர்ந்து கன்னட திரை உலகின் பிரபல நடிகை ராகிணி திவேதியின் நண்பரும், அரசு ஊழியருமான ரவி சங்கரை கைது செய்தனர்.


இந்நிலையில், நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், 2 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த 4-ந்தேதி ராகினி திவேதியை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.

தற்போது, பெங்களுருவில் உள்ள நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

கன்னட திரையுலகில் அடுத்தடுத்து நடிகைகள் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகை ராகினி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைதான நடிகை சஞ்சனா கல்ராணி பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.