லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த நாளில், ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த கொடூர வெடிவிபத்தில் தற்போது வரை 80 பேர் உயிரிழந்திருப்பதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் லெபனான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து, பெய்ரூட் நகரையே உருகுலைய செய்திருக்கும் இந்த மோசமான வெடிவிபத்து எப்படி நடந்தது என அந்நாட்டின் பிரதமர் லெபனான் பிரதமர் ஹசன் டியப் விளக்கமளித்துள்ளார்.
வெடிவிபத்து நடந்த துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் கடந்த 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வேதிப்பொருள் எதிர்பாராத விதமாக வெடித்ததில் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை எனவும் லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment