சிங்கப்பூரில் 408,000-க்கும் மேற்பட்ட COVID-19 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

வெள்ளி, 5 ஜூன், 2020

சிங்கப்பூரில் 408,000-க்கும் மேற்பட்ட COVID-19 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன

சிங்கப்பூரில் ஜூன் 1ஆம் தேதி வரை 408,000-க்கும் மேற்பட்ட COVID-19 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.

அதன் மூலம் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 71,700 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கான் குறிப்பிட்டார்.

இன்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்து மூலம் பதிலளித்தார்.

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டநாள் அனுமதி அட்டையில் உள்ளவர்கள் என சமூக அளவில் 202,000 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

அந்தக் கணக்கின்படி பார்த்தால், ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 37,500 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

வரும் மாதங்களில் சிங்கப்பூர் ஒரு நாளைக்கு 40,000 பரிசோதனைகள் நடத்தத் தயாராகி வருவதாக அமைச்சர் கான் தெரிவித்தார்.சமூக அளவில் அதிகமான பரிசோதனைகளை நடத்துவதால் கிருமித்தொற்று இடங்களை எளிதில் கண்டறிந்து தடுக்கலாம் என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.