அநுராதபுரம் – தஹய்யாகம சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் S.F.லொக்கா என அழைக்கப்படும் இரோன் ரணசிங்க உயிரிழந்துள்ளார்.
இன்று பகல் மேலும் இருவருடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.S.F.லொக்கா உள்ளிட்ட மூவரும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 30 வயதான S.F.லொக்கா உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்தில் T56 ரக துப்பாக்கி ரவை கைப்பற்றப்பட்டுள்ளது. S.F.லொக்கா என அழைக்கப்படும் இரோன் ரணசிங்க , கராத்தே வீரர் வசந்த சொய்சாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபராவார்.
No comments:
Post a Comment