அதாவுல்லாஹ் குதிரையை காட்டி நீலமலை திருடன் போல் வாக்கு கேட்டு வருகின்றார்... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Sunday, July 19, 2020

அதாவுல்லாஹ் குதிரையை காட்டி நீலமலை திருடன் போல் வாக்கு கேட்டு வருகின்றார்...

அதாவுல்லாஹ் தோல்வியடைபவர் எனவும் அவர் குதிரையை காட்டி நீலமலை திருடன் போல் வாக்கு கேட்டு வருகின்றார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸடீன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் மாவட்டத்தை வெல்லுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸை ஆதரித்து கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வொன்றினை அடுத்து ஞாயிற்றுக்கிழமை(19) மாலை 5 மணியளவில் செய்தியாளர் மாநாடு ஒன்று அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவித்ததாவது
தேர்தல் முடிந்தவுடன் கல்முனைக்கு படையெடுக்க உள்ளதாக ஞானசார தேரர் குறிப்பிட்ட கருத்து கண்டனத்திற்குரியது.இந்த தேரர் மொட்டு காரர்களின் தமிழர்களின் வாக்குகளை பிரிக்க தெரிந்தெடுத்த பேர்வழி ஆவார்.அவருக்கு கருணா பக்கபலமாக இருக்கின்றார்.இதற்கு காரணம் என்ன? ஏழு பாராளுமன்ற பிரதிநிதித்தில் நான்கை பெறுவதுதான் இவர்களது இலக்கு ஆகும்.
மேலும் தேசிய காங்கிரஸில் தலைவர் அதாவுல்லா மூன்று ஆசனத்தை கேட்க இரண்டுதான் வழங்க படும் என்ற வேளை மூன்றில் தற்செயலாக ஒரு பிரதிநிதியை அவர் பெற்றால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பெற சாதகமாக அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டார்கள். இதனால் தான் அம்பாறை மாவட்டத்தை மொட்டு கட்சியின் ஆளுமையின் கீழ் பெரும்பான்மை சிங்கள ஆதிக்கத்தை காட்டி கொள்ள அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள்.
ஆயினும் அம்பாறை மாவட்டத்தில் அதிக ஆதரவு முஸ்லிம் காங்கிரஸுக்கு இருக்கிறது என்பதையும் மக்கள் அக்கட்சிக்கு மேலதிக ஆசனங்களை பெற ஆதரவினை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இதற்கு சமாந்தரமாக வாக்குகளை கேட்கின்ற அதாவுல்லாஹ் முஸ்லிம் காங்கிரஸோடும் இல்லை முஸ்லிம் மக்களோடும் இல்லை என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.அவர் தேசிய காங்கிரஸில் கேட்பதால் 25 ஆயிரம் வாக்குளை பெற்று மொட்டு கட்சிக்கு பலம் சேர்க்கிறார். அவர் அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம்களிடம் இருந்து பிரிக்கும் வேலையை செய்கின்றார் .1961 ஆண்டு 4 வீதம் இருந்த சிங்களவர்களின் வாக்கு வீதம் தற்போது 5000 வாக்கு வீதம் தான் வித்தியாசம் கண்டுள்ளது.இந்நிலைக்கு வெளி மாவட்ட குடியேற்றம்கள் எம்மை சிறுமை படுத்தியுள்ளமையே காரணம். 
தமிழ் முஸ்லிம் கிராமங்களை நகரசபையை அமைத்து முஸ்லிம்களை அடக்கி ஆள திட்டம் இருக்கிறது.வெளி மாவட்டங்களில் இருந்து குடியேற்றி விவசாயத்தில் அவர்களுக்கு நீர் விநியோகிக்கப்பட்டு தமிழ் முஸ்லிம் பிரதேசங்களை வானம் பார்த்த பூமியாக மாற்ற மயல்கின்றனர்.அது மாத்திரமன்றி கருணாவை கொண்டு வந்து தமிழர்களுக்கு நிலத்தை பிரித்து கொடுக்க மயற்சிக்கின்றனர்.தற்போது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைக்க கேட்கிறது . ஆனால் கிழக்கை மையப்படுத்தி நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு திட்டமிட்டுள்ளது.

இன்னும் சிறிது காலத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் சிங்களவர்களின் கைகளுக்கு மாறும் நிலை தோன்றியுள்ளது என்பேன்.
இத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் பேசியபோது அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடத்தான் வேண்டும் என தற்போது களமிறங்கியுள்ளனர்.இவர்கள் பஷில் ராஜப்கவின் திட்டத்தின் படி அம்பாறையில் இணைந்து கேட்கவில்லை .காரணம் மொட்டிற்கு அதிக ஆசனத்தை பெற்று கொடுக்கவே வெறும் சொப்பின் வேகத்துடன் வந்த ரிசாட் பதியுதீன் முயல்கின்றார்.இவருக்கு எப்படி ஆயிரம் கோடி பணம் எப்படி வந்தது என கேட்க விரும்புகின்றேன்.
அத்துடன் குதிரையை காட்டி நீலமலை திருடன் போல் அதாவுல்லாஹ் வாக்கு கேட்டு வருகின்றார். அவர் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை மொட்டிற்கு அடிமைகளாக்க பாடுபடுகின்றார்.இதே போல் கருணா அம்மான் என்பவர் மிக மோசமான மனிதன் அவரின் வாழ்க்கையின் முடிவு கூட அவரின் செயற்பாடுகள் போல் அமையும் என கூறினார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தவிசாளர் சேகு இஸ்ஸடீன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் டெலிபோன் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஷுடன் கல்முனை மாநகர சபை முதல்வர் ,பிரதி முதல்வர், உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ,முஸ்லிம் காங்கிரஸ் சிரேஸ்ட உறுப்பினர்கள் ,ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.