பனாமாவின் தலைநகரில் இருந்து வடக்கே 80 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஏரியின் அருகே 7 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உயரிழந்தவர்களில் நான்கு பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உள்ளடங்குவதோடு, இவர்கள் அனைவரும் 17 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கொலையை மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்களில் துப்பாக்கிச் சூட்டுக்கு நிகரான காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் மரணத்திற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதோடு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment