தமிழ் தேசிய கூட்டமைப்பு அரங்கேற்றிய விடயத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்- ஹரீஸ் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Sunday, July 19, 2020

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரங்கேற்றிய விடயத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்- ஹரீஸ்

கருணாவும் ஞானசாரவும் கல்முனையை கலவர பூமியாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. ஐக்கியமாக இருக்கும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் பேசும் பேச்சுகளை நிறுத்த வேண்டும். இவ்வாறான இனவாதிகளின் ஆசைகளுக்கு இடமளிக்க கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் மாவட்டத்தை வெல்லுவதற்காக கட்சியின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு கட்டமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக தவிசாளர் சேகு இஸ்ஸடீனுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை(19) மாலை 5 மணியளவில் செய்தியாளர் மாநாடு ஒன்றினை அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்த பின்னர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவித்ததாவது
மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் அல்லாமல் கலவர பூமியாக மாற்றுவதற்கான முஸ்தீபுகள் தற்போது நடைபெறுகிறது.
கருணா அம்பாறைக்கு வந்த பிறகு முஸ்லிம்ககளை கேவலமாக பேசுவதும் வந்தேறு குடிகள் என்று மிருகத்தை விட கேவலமாக கூறிவருவதை கட்சியின் பிரதி தலைவர் என்றவகையில் வன்மையாக கண்டிக்கின்றேன்.

கல்முனை வடக்கு பிரதேச தரமுயத்தும் விடயத்தில் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுபோடுவதாக கூறியிருப்பதும் ஞான சார தேரரின் படையெடுப்பு என்பதும் வன்முறையை தூண்டுவதாகும்.எனவே கல்முனை கருணாவின் அப்பன் வீட்டு சொத்தல்ல என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன். கல்முனை விவகாரத்தில் முஸ்லிம் தலைவர்கள் கட்டி காத்த நகரம் .எம்மை சிதைத்தால் முஸ்லிம்கள் மாவட்டத்தில் சிறுபான்மையாக்கபடலாம் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன்தில் இணைந்த வடகிழக்கு தனி மாநிலமாக மாற்றப்பட வேண்டும் என தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருப்பது முஸ்லிம் மக்களை அக்கறை படாமல் பலவந்தமாக சதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு அரங்கேற்றிய விடயத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். 

முஸ்லிம்களை அநாதையாக விடும் வேலைகளை தமிழ் தலைமைகள் செய்வதை தந்தை செல்வா இருந்திருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார். தராள மனதுடன் செயற்பட்ட தமிழ் தலைமைகள் மத்தியில் இப்போதுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவது மன வேதனைக்குரியது.கருணாவும் ஞானசாரவும் கல்முனையை கலவர பூமியாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. ஐக்கியமாக இருக்கும் தமிழ் இ முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் பேசும் பேச்சுகளை நிறுத்த வேண்டும். இவ்வாறான இனவாதிகளின் ஆசைகளுக்கு இடமளிக்க கூடாது என தெரிவித்தார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் டெலிபோன் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஷுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தவிசாளர் சேகு இஸ்ஸடீன் மற்றும் கல்முனை மாநகர சபை முதல்வர் ,பிரதி முதல்வர், உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ,முஸ்லிம் காங்கிரஸ் சிரேஸ்ட உறுப்பினர்கள் ,ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.