பாராளுமன்ற உறுப்பினர்களை தயாரிக்கும் இயந்திரமாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றப்பட்டுள்ளது - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Sunday, July 5, 2020

பாராளுமன்ற உறுப்பினர்களை தயாரிக்கும் இயந்திரமாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றப்பட்டுள்ளது

முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் ரவூப் ஹக்கீம் தொலைபேசி சின்னத்தில்  பால் போத்தல் சஜித் பிரேமதசவையும் கூட்டி கொண்டு வருவதை கூறுவதனால் என்னை பைத்தியம் என்பார்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்களை தயாரிக்கும் இயந்திரமாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றப்பட்டுள்ளதாக   தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் தெரிவித்தார்.


அம்பாறை மாவட்ட கல்முனை பிரதேச பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்கான  குழுத் தெரிவு  வேட்பாளர் றிஸாட் ஷெரீப் மற்றும் கல்முனை தேசிய காங்கிரஸ் மத்திய குழுவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கூட்டம் வெள்ளிக்கிழமை(2) இரவு தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற போது தனது உரையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

எமது சகூகத்தின்  பிரச்சினைகள் எதிர்காலத்தில் சேதாரமிலலாமல் தீர்க்கப்பட வேண்டும். குருடனைப் பார்த்து விறுவிறு என்று சொல்வதில் பயனில்லை அதேபோன்றுதன் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமால் ஒருபோதும்  விழிக்க முடியாது. இப்படி கட்சியின் தலைவர் இருக்கும் நிலையில்  தம்பி ஹரீீஸ்  கட்சியின் பிரதி தலைவரை நாம் எவ்வாறு சொல்லிக் கொள்வது என்று தெரியவில்லை.அதே போன்று காலத்திற்கு காலம் மக்கள் தலைவரே பேசுவார் ஆனால் வேறுவழியில்லை நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக வேண்டுமே என்பதற்காய் முஸ்லிம் காங்கிரசை  அவர்கள் ஆதரிப்பார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களை தயாரிக்கும் இயந்திரமாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றப்பட்டுள்ளது.இதுவே உண்மையாகும்.


முஸ்லிம் காங்கிரஸால் பிறை கொடியா? புலி கொடியா என்ற கோஷத்தினை மாத்திரம் எழுப்ப முடியும். டயர்களை எரிக்க முடியும் மக்களை வீதியில் நிறுத்த முடியும் .தலைவன் என்பவன் மக்களை வீதியில் நிறுத்துபவன் அல்ல தீர்வை பெற்று கொடுப்பவரே ஆவார்.நான் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்றால் முஸ்லிம் காங்கிரஸில் இருந்திருக்க முடியும்.

1989 பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரப் தலைமையில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பெற போராடி ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றோம் . அதே நிலையில்  தலைவரது வழியில் தேசிய காங்கிரஸ்  இரண்டாம் கட்டம் என்பதனை ஞாபகப்படுத்துகிறது.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களிடம் இருக்கும் வாக்கு பலத்தை பயன்படுத்தினால் நான்கு ஆசனத்தை பெறலாம் இதை நான் சொன்னால் பைத்தியம் என்பார்கள்.  களத்திலே முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் ரவூப் ஹக்கீம் தொலைபேசி சின்னத்தில் வருகின்றார் கூடவே பால் போத்தல் சஜித் பிரேமதாவையும் கூட்டி கொண்டு வருகிறார். இதன் முலம் எதை சாதிக்க போகின்றார்கள் மீண்டும் முஸ்லிம்கள் அரசியல் தெரியாதவர்கள் என காட்டிக்கொடுக்க போகின்றாரா?

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதுர்தீன் கிழக்கு மாகாணத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்கின்றார் தனது சொந்த மண்ணிலே 30 வருடங்களாக  அகதிகளாக இருக்கும் மக்களின் அபிலாஷைகளை முறையாக எண்ணவில்லை. அவர்களுக்கு வீடு வசதிகளையோ வாழ்வாதாரத்தை பற்றி சிந்திக்கவில்லை.நெறிமுறைகளை பற்றி சிந்திக்கவில்லை . உட்கட்டமைப்பு ஊடாக ஒரு வீதியை கூட அகலமாக போடவில்லை. ஆனால் கிழக்கு மாகாணத்தை தாருங்கள் நான் அபிவிருத்தி செய்ய போகின்றேன் என ரிஷாத் பதூர்தீன் கேட்டார். கேட்பவன் செய்து காட்டியவனாக இருக்க வேண்டும் இதை நாம் கேட்டு வளைத்திருந்து கையடித்து சந்தோசம் பட்டோம் அல்லவா? பிளாஸ்டிக் வாளிகளை  வழங்குவதா அபிவிருத்தி.இன்று தன் குடும்பத்தையையே காப்பாற்ற முடியாத நிலை விசாரணைகளில் தனது சகோதரர்கள் நீதி மன்றமும் என அவரது காலம் செல்கிறது.

வரலாற்றில் நீங்கள் வெளிக்காட்டியிருக்கும் துவேசங்கள் முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதிகள் என முத்திரை குத்த வைத்த உங்களால் இன்று சமூகத்தை தூக்கி பிடிக்க முடியாது .ஹக்கீம் வந்து பிரதேச வாதத்தை தூண்டவைத்தார் அதன் வெளிப்பாடுதான் சாய்ந்தமருது கல்முனை அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று என பிரித்தாளும் தந்திரங்கள். தேர்தல் காலத்தில் தீர்த்தக்கரை போன்று பத்தாடிவிட்டு அவர்கள்  போனார்கள் .

நாங்கள் எப்படியாவது அரசியலுக்கு போக வேண்டும் என்பதற்காக தம்பி ரிஷாட் பதுர்தீனை கூட தலைவராக்கிய கூட்டமே நாம். கல்முனை மண்ணிலே பிளாஸ்டிக் வாளிகளை பகிர்கின்ற கலாசாரத்தை கொண்டுவந்தவர்கள் அவர்களை சாரும். மன்னாரில் இருந்து வந்து பிளாஸ்டிக் வாளிகளை வழங்கும் போது கையடித்தவர்களல்லவா நாங்கள்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் 33 வாக்குகளுக்கு பெறுமதி இல்லாமல் செய்ய வாக்கு போட்டோம் அல்லவா .தேர்தல் வரும் போது தம்பி குடும்பத்தை அரசாங்கமும் பொலிஸாரும் விசாரணை செய்யும் போதும் கூட மக்கள் புரிந்து கொள்ளவில்லையா? என கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.