எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தில் தனது புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உத்தரவிட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாதுகாப்புப் படைகள், அரசு சேவை, நிறுவனங்கள், சபைகள் மற்றும் சட்டரீதியான அமைப்புகளில் பணியாற்றும் எந்தவொரு பொது அதிகாரியும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர அனைத்து ஆளுநர்கள், அமைச்சக செயலாளர்கள், மாவட்ட மற்றும் மாகாண செயலாளர்கள்,
கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் சட்டரீதியான அமைப்புகள் மற்றும் பிற பிரிவுத் தலைவர்களுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் தேர்தலில் இதனை வலியுறுத்தி கூறியுள்ளார்
செயலாளர்கள் ஆளுநர்கள், அமைச்சக செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில், மேலும் தேர்தல் திணைக்களத்தின் தலைவருக்கு ஒரு நகலுடன், அனைத்து அரசு அதிகாரிகளும் இந்த உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment