மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்றைய தினம் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும் வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாணத்தின் கடலோர பகுதிகளிலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் அங்கு காற்றின் வேகமானது மணிக்கு 70-80 வரையில் வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
களுத்துறை தொடக்கம் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலனா கடலோர பகுதிகளில் கடல் அலைகள் 2 முதல் 2.5 மீற்றர் வரையில் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கரையோரங்களில் கடலலைகளின் சீற்றம் அதிகரித்துக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது
No comments:
Post a Comment