கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.
இந்த நிலையில், கிளிநொச்சி – பரந்தன் – ஏ 35 வீதியில் வௌிக்கண்டல் பகுதியில் டிப்பர் மோதி 18 மாடுகள் இன்று அதிகாலை இறந்துள்ளன.
விசுவமடு பகுதியில் இருந்து வேகமாக பயணித்த டிப்பர் வாகனம் வீதியில் சென்றுகொண்டிருந்த மாடுகள் மீது மோதியுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து டிப்பர் வாகனத்தை நிறுத்தாமல் சாரதி பயணித்ததாக தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment