எஞ்சிய காடுகள் தொடர்பான 5/2001 சுற்றுநிரூபத்தை இரத்து செய்யப் போவதில்லை: S.M.சந்திரசேன - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, July 9, 2020

எஞ்சிய காடுகள் தொடர்பான 5/2001 சுற்றுநிரூபத்தை இரத்து செய்யப் போவதில்லை: S.M.சந்திரசேன


எஞ்சிய காடுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் அண்மைக்காலமாக அதிகம் பேசப்படுகிறது.

தனி நபர் தீர்மானத்திற்கு அமைய, இந்த காணிகள் பல்வேறு தரப்பினர் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அபாயம் ஏற்பட்டமையே அதற்கான காரணமாகும். 2001 ஆம் ஆண்டின் சுற்றுநிரூபமொன்றில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் இந்த அபாயம் தோற்றுவிக்கப்பட்டது.

இன்றைய அமைச்சரவையில் இந்த விடயம் தொடர்பில் ஆலோசிக்கப்படவிருந்த போதிலும் அது பிற்போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், எஞ்சிய காடுகள் தொடர்பான 5/2001 சுற்றுநிரூபத்தை இரத்து செய்யப் போவதில்லை என சுற்றாடல் அமைச்சர் S.M.சந்திரசேன தெரிவித்தார்.

அதனை மீள் பரிசீலனை செய்வதற்கு அமைச்சரவை இன்று தீர்மானித்ததாகவும் கிராமிய மட்டத்தில் குழுக்களை அமைத்து முறையாக நடவடிக்கை எடுக்கும் வரை அமைச்சரவை இதனை நடைமுறைப்படுத்தாது எனவும் அவர் கூறினார்.

5/2001 சுற்றுநிரூபத்தில் அரசாங்கம் கைவைக்கப் போவதில்லை எனவும் சில திருத்தங்களை மாத்திரமே செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.