மின்சார கட்டணத்திற்கு 25 வீத நிவாரணம் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, July 9, 2020

மின்சார கட்டணத்திற்கு 25 வீத நிவாரணம்


மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் மின்சார கட்டணங்களில் 25 வீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பில் இன்று (09) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.

இந்த நிவாரணங்கள் குறையாது எனவும் 25 வீதம் விலைப்பட்டியல் குறையும் எனவும் மின் துண்டிக்கப்படாது எனவும் நிலுவைப் பணம் அறவிடப்படமாட்டாது எனவும் பந்துல குணவர்தன கூறினார்.

இதனால் எவ்வளவு நட்டம் ஏற்பட்டாலும் இலங்கை மின்சார சபை அதனை ஏற்றுக்கொள்ளும் என குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அது தொடர்பில் தமது அதிகாரிகளுடன் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் எவ்வாறாயினும் எதிர்காலத்தில் விலைப்பட்டியல் குறையுமே தவிர அதிகரிக்காது என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.