மேல்மாகாணத்தில் இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 409 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, முகக்கவசங்கள் இன்றி நடமாடிக்கொண்டிருந்த 1,522 பேர் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சமூக இடைவெளியை பேணாத 1,340 பேருக்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment