ஜோர்ஜ் ஃபிளொயிட்டின் மரணத்திற்கு பிற்பாடுதற்போது அமெரிக்காவின் பல வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. உலக நாடுகளுக்கு இடையே முன்மாதிரியாகத் திகழும் அமெரிக்காவானது தற்பொழுது வன்முறைகளாலும் கொலைகளும் கதிகலங்கி நிற்பதுடன் ஆங்காங்கே கொள்ளைச் சம்பவங்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
கடந்த காலங்களில் covid-19 நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்காவிற்கு இது மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு நிலைமையாகும் இதற்கிடையில் தற்போது அமெரிக்க அதிபர் பல விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்
உலக அமைதியை நிலைநாட்டும் அமெரிக்காவானது சொந்த நாட்டில் அமைதியை
நிலைநாட்ட அந் நாட்டு மக்கள் மீது வன்வன்முறை சம்பவங்களையும் அடக்குமுறைகளையும் ஏற்படுத்துவது பல காணொளிகள் மூலம் வெளியாகியுள்ளன. தொடர்ந்து இச்சம்பவங்கள் நீடிக்குமானால் அமெரிக்காவின் பொருளாதார நிலை இன்னும் மந்தம் அடையலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment