காரைதீவு பலநோக்குக்கூட்டுறவுச்சங்க புதிய அலுவலகக்கட்டத்திறப்பு விழா நேற்று சங்கத்தலைவர் யோ.கோபிகாந்த் தலைமையில் எளிமையாக நடைபெற்றது.
பிரதம அதிதியாக கல்முனைப்பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திருமதி கலாதேவி உதயராஜா கௌரவஅதிதிகளாக மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.ஜூனைதீன் காரைதீவு பிரதேச கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்எம்.ஏ.எம்.அன்வர் கூ.அ.உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
புனரமைக்கப்பட்ட புதிய அலுவலகக்கட்டடத்தை அதிதிகள் நாடாவெட்டித்திறந்து வைத்தனர்.
இதுவரைகாலமும் காரைதீவு 5ஆம் பிரிவில் இயங்கிவந்த இவ் அலுவலகம் காரைதீவு 12ஆம் பிரிவில் ப.நோ.கூ.சங்கத்திற்கான பிறவுண் கட்டடத்தொகுதியில் நேற்று திறந்துவைத்ததன்மூலம் அங்கு இயங்கிவருகிறது.
(காரைதீவு நிருபர் சகா)
No comments:
Post a Comment