பெண்குயின் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

வெள்ளி, 12 ஜூன், 2020

பெண்குயின்பெண்குயின் இயக்குனர் ஈஸ்வர் காத்திக் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம், இத்திரைப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பாளராக இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழியில் உருவாகும் இப்படம் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த நிலையில் சில காரணங்களால் தென்னிந்திய திரையரங்குகள் தாற்காலியமாக மூடப்பட்டது. பின்னர் இப்படம் 2020 ஜூன் 19ல் இணையதள ஓ.டி.டி பக்கமான அமேசான் திரைப்பட பக்கத்தில் வெளியாகவுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் மூலம் முதன் முதலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய திரைத்துறையில் புகழ் பெற்றுள்ளார். மேலும் பெண்குயின் திரைப்படம் தமிழில் நேரடியாக ஓ.டி.டி பக்கங்களில் வெளியாகும் இரண்டாவது திரைப்படமாகும். ஓ.டி.டி பக்கத்தில் நேரடியாக வெளியாகியுள்ள முதல் திரைப்படம் நடிகை ஜோதிகா முன்னனி நடிப்பில் உருவான "பொன்மகள் வந்தாள்" திரைப்படமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.