முழுத் தீவுக்குமான சமாதான நீதவானாக தருமலிங்கம் குவேந்திரன் ஆசிரியர் சத்தியப் பிரமாணம் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

வெள்ளி, 12 ஜூன், 2020

முழுத் தீவுக்குமான சமாதான நீதவானாக தருமலிங்கம் குவேந்திரன் ஆசிரியர் சத்தியப் பிரமாணம்அம்பாரை மாவட்டம் காரைதீவினைச் சேர்ந்த  தருமலிங்கம் குவேந்திரன் ஆசிரியர் தீவு முழுவதிற்குமான சமாதான நீதவானாக  12.06.2020 திகதியன்று   அம்பாரை மாவட்ட நீதிமன்ற நீதவான்  முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து  கொண்டார்.

கமு / கமு / இ.கி.மி பெண்கள் பாடசாலை காரைதீவில்  ஆசிரியராகக் கடமை புரியும் இவர், கடந்த 12 வருடங்களுக்கு மேலாக  சம்மாந்துறை கல்வி வலயத்தில் கமு / சது / வளத்தாப்பிட்டி அ.த.க. பாடசாலையில் ஆசிரிய சேவை புரிந்தவராவார்.

தமது ஆரம்பக் கல்வியை கமு / கமு / விஷ்ணு வித்தியாலயத்திலும், இடைநிலை உயர்கல்வியை கமு/ கமு/ விபுலாநந்த மத்திய கல்லூரியிலும் பெற்றுக் கொண்டவர், வவுனியா தேசியக் கல்விக் கல்லூரியில் கற்பித்தல் தொடர்பான தேசிய கல்வி டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்த இந்து சமய டிப்ளோமா பட்டதாரியாவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.