உன் முகம் காணவே
என் விழிகள் ஏங்குதே
உன் அகம் காணவே
என் உயிர் வாடுதே
முகவரி இல்லா - உன்
இதயக் கதவிற்கு
தாழ்ப்பாள்
போட்டுவிடாதே - பெண்ணே
உன் முகம் காணவே
என் விழிகள் ஏங்குதே....
உன் நிலைமை
என்னவென - நான்
அறியாத போதும்
உன் அகம் நாடி வர
தவிக்கிறதே
என் சுவாசக்காற்று...
உன் முகம் காணவே
என் விழிகள் ஏங்குதே....
எத்தனை உறவுகள் தான்
அருகில் இருந்தாலும் - நீ
கொடுக்கும் அன்பு
உயர்ந்து நிற்குது
வானளாவியே....
உன் முகம் காணவே
என் விழிகள் ஏங்குதே...
எனக்காக எது இருந்தும்
இல்லை பயன்
என் இதயம் விரும்பும்
உயிர்
நீ மட்டும்
போதும்
என்னருகில் ...







உன் முகம் காணவே
என் விழிகள் ஏங்குதே....





























No comments:
Post a Comment