உன் கண்கள்
பேசும் மொழியறிய
தொடர்ந்த என்
தேடல் தொடர
அந்த கண்களின்
மிளிர்வில் மெய்மறந்து
அதனுள்ளே
நான் தொலைய
புருவங்கள் சுழித்து
நீ பேசும் அசைவுகள்
உன் அழகை
மெருகூட்ட
அவ்வழகின் அதிசயம்
கண்டு அசந்து
கன்னக்குழி வழியே
ஜொலிக்கும் வெட்கத்தில்
திளைத்து
உனை அள்ளி
அணைக்கிறேனடி
ஆசையால்
தினமும் நான்
அடி கள்ளி
நீ எனக்கு என்றுமே
அழகின் உச்சம்
என் கண்ணில்
எப்போதும்
நீ மட்டுமே மிச்சம்..






No comments:
Post a Comment