பிடிக்கின்றதோ பிடிக்கவில்லையோ
பிடித்துத்தான் ஆகவேண்டும் எனும் கட்டாயத்தின் மத்தியிலே கரம் பற்றி இறுக அணைத்துக் கொள்கிறான்...
அம்மாவின் ஆசையும்
அப்பாவின் அக்கறையும்
சுமையாய் அவன்
தலையிலே இறங்கி விட
சிந்தனையில் ஒரே நினைவாய்
சிரத்தையுடனே
கவனித்துக் கொள்கிறான்
சிந்தை சிதறாவண்ணம்.....
நடக்கயிலும் இருக்கையிலும்
உறங்கையிலும் உணவருந்தயிலும்
எப்பொழுதும் அவன் கரங்களிலே தவழ்ந்தபடி இருக்கும் புத்தகத்தை........
No comments:
Post a Comment