
கொரோனா நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் பலஅமைப்புகளும் பலகோணங்களிலும் சிவாரணங்களை வழங்கிவருகின்றனர். எனினும் அம்பாறை மாவட்டத்தில் ஒரு குழுவினர் தொடர்சசியாக 75வது நாட்களாக பல்வேறுவகையான நிவாரணங்களை வழங்கிவருகின்றார்கள் என்றால் அது 'கொவிட்கெத்து' அணியினராகத்தானிருக்கும். அவர்களை பிரதேசசெயலாளர் என்ற ரீதியில் மனமாரப்பாராட்டுகிறேன்.
இவ்வாறு திருக்கோவில் பிரதேசத்துக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய மண்டானைப்பிரதேசத்தில் குழந்தைகளுக்கான பால்மா பக்கட்டுகளை வசீகரன் அறக்கட்டளை நிதியத்தால் வழங்கிவைக்கும் வைபவத்தில் உரையாற்றிய திருக்கோவில் பிரதேசசெயலாளர் தங்கையா கஜேந்திரன் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வு நேற்று அணியின் தலைவரும் வசீகரன் அறக்கட்டளை நிதியத்தின் ஸ்தாபகரும் காரைதீவு பிரதேசசபையின் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
கொவிட்19 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைவிட மக்கள் பசியால் பாதிக்கப்பட்ட வீதம் அதிகம். இதனையறிந்து மனிதாபிமானரீதியில் ஊரடங்குச்சட்டத்திற்கு மத்தியில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு குழுவினர் கடந்த 75நாட்களாக தொடராக உலருணவு நிவாரணங்களை வழங்கிவருகின்றனர்.
அந்த 'கொவிட்கெத்து' அணியில் முக்கியமாக இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் சமுகசெயற்பாட்டாளர்களான கி.ஜெயசிறில் வி.ரி.சகாதேவராஜா ஆகிய மூவரின் நன்மதிப்பு காரணமாக புலம்பெயர் அமைப்புகள் பல தாமாக முன்வந்து சுமார் 70 லட்சருபா பெறுமதியான உலருணவு நிவாரணங்களை வழங்கிவைத்தது..
கொரோனவால் நாடு முடக்கப்பட்டு மக்கள் குறிப்பாக பின்தங்கிய கிராம மக்கள் உணவுக்காக கையேந்தியவேளை மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் 'கொவிட்கெத்து' என்ற அணியினர் உயிரைத் துச்சமென மதித்து களத்தில் இறங்கினர். ஏனையோர் கொரோனா பயம் ஊரடங்கு என்று வீட்டில் முடக்கப்பட்டுக்கிடந்த தருணத்தில் இக்குழுவினர் இவ்விதம் துணிந்து கெத்துடன் வெளியேவந்து இம்மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டுவருகின்றதை உண்மையில் பாராட்டவேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக 75நாட்கள் தொடர்ச்சியாக மக்கள்நல நிவாரணச்சேவையை முன்னெடுத்துவந்த 'கொவிட்கெத்து' அணியினரின் உலருணவு நிவாரணவிநியோகம் மலையகத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
பாராட்டுக்கள். உங்களுக்கு இறைவன் நல்லகூலியைத்தருவான். என்றார்.
(காரைதீவு நிருபர் சகா)
No comments:
Post a Comment