நடிகர் அர்ஜுனின் உறவினரான இவர், நடிகை மேக்னா ராஜின் கணவர் ஆவார். 39 வயதே ஆன இவரது மரணம் கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவரின் இறுதிச்சடங்கு இன்று(ஜுன் 8) நடந்தது. கொரோனா வைரஸ் அச்சத்தையும் தாண்டி திரையுலகினரும் பலரும் இவருக்கு அஞ்சலி செலுத்தினர். யஷ், சுதீப், புனீத் ராஜ்குமார் உள்ளிட்ட கன்னட திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
குறிப்பாக சிரஞ்சீவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது நெஞ்ச உருக வைத்தது. காதல் கணவரை இழந்த மேக்னா ராஜ், கணவரின் உடலை கட்டியணைத்து கதறி அழுது, முத்தமிட்டு இறுதிவிடை கொடுத்தார்.
மேக்னா ராஜ் தற்போது கர்ப்பமாக உள்ளார். இப்படிப்பட்ட சூழலில் மனைவியை தவிக்க விட்டு போய்விட்டார்.
சிரஞ்சீவியின் உறவினரான நடிகர் அர்ஜுனும் கதறி அழுதார். சிரஞ்சீவியின் உடல் அவரின் பண்ணை வீட்டில் வைத்து அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment