பொதுத்தேர்தல் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி...... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

செவ்வாய், 9 ஜூன், 2020

பொதுத்தேர்தல் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி......


எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று முற்பகல் வெளியானது.

இதில் அரசியல் கட்சிகளின் பெயர்கள், வேட்பாளர்களின் பெயர் மற்றும் விருப்பு இலக்கம் என்பவற்றோடு வாக்கு சாவடிகளின் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி விபரங்கள் அந்தந்த மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் திகதி ஜூன் மாதம் 20 திகதி என ஏலவே குறிக்கப்பட்டு இன்னும் அந்த திகதி ரத்து செய்யப்படாத நிலையில் அந்த திகதியை மையப்படுத்தி வேட்பாளர் விருப்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியாக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நேற்று அறிவித்திருந்ததிற்கு அமைவாக இன்று இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதேநேரம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.