தாறுமாறாக வெளியான சீயான்60 அப்டேட். - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

செவ்வாய், 9 ஜூன், 2020

தாறுமாறாக வெளியான சீயான்60 அப்டேட்.கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களுக்கு பிறகு விக்ரம் தனது 60வது படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தை யார் இயக்குகிறார்கள், யார் இசையமைப்பாளர் என்கிற விவரத்தை படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் வெளியிட்டுள்ளார்.
விக்ரம் நடிக்கும் சியான்60 வது படத்தை பேட்ட, ஜகமே தந்திரம் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள செய்தி அதிகாரப்பூர்வமாக வெளி வந்துள்ளது. இதில் நீண்ட நாட்கள் கழித்து விக்ரம் கேங்ஸ்டர் படத்தில் நடிக்க உள்ளது போஸ்டரிலேயே தெரிகிறது.

அதே போல் இந்த படத்தில் விக்ரமுடன் சேர்ந்து அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார். இந்த படத்தை எழுதி இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். பேட்ட படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் உடன் அனிருத் மீண்டும் கைகோர்க்கிறார்.துருவ் விக்ரம் நடித்த முதல் படமே ரசிகர்களிடம் வரவேற்பை பெறத் தவறியது. இத்தனைக்கும் அந்த படத்தை பார்த்து பார்த்து ரெடி செய்தவர் விக்ரம் தான். நடிப்புக்கு பாராட்டு கிடைத்தாலும் படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் தன்னுடன் சேர்த்து மகனையும் வியாபார ரீதியாக பெரிய ஹீரோவாக மாற்ற இந்த யுத்தியை பயன்படுத்தியுள்ளார் விக்ரம். படத்துக்கு அனிருத் இசை பெரும் பலமாக இருக்கும் என கருதப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் கோப்ரா படம் வெளியானாலும் பெரிய அளவு வசூல் இருக்குமா என்பது சந்தேகமே.அதனை புரிந்து கொண்டு அதே தயாரிப்பாளருக்கு தன்னுடைய அடுத்த படத்தையும் கொடுத்த விக்ரமை கோலிவுட் வட்டாரங்களில் பாராட்டி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.