ஆர்க்டிக் வட்டத்திற்குள் ஒரு ஆற்றில் 20,000 டன் டீசல் எண்ணெய் கசிந்ததை அடுத்து ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
சைபீரிய நகரமான நோரில்ஸ்க் அருகே ஒரு மின் நிலையத்தில் எரிபொருள் தொட்டி கடந்த வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில் இந்த கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் இரண்டு நாட்களுக்குப் பிறகு அதிகாரிகள் அறிந்ததை கண்டுபிடித்த ஜனாதிபதி புடின் தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் என கூறப்படுகிறது.
இந்த ஆலையானது உலகின் முன்னணி நிக்கல் மற்றும் பல்லேடியம் உற்பத்தியாளரான நோரில்ஸ்க் நிக்கலின் துணை நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.
இந்த ஆலையானது உலகின் முன்னணி நிக்கல் மற்றும் பல்லேடியம் உற்பத்தியாளரான நோரில்ஸ்க் நிக்கலின் துணை நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.
குறித்த விவகாரம் அரசு அதிகாரிகளின் பார்வைக்கு ஏன் தாமதமாக கொண்டு செல்லப்பட்டது என கேள்வின் எழுப்பிய புடின்,
சமூக ஊடகங்களிலிருந்து இதுபோன்ற அவசரகால சூழ்நிலைகள் தொடர்பில் நாம் அறியப் போகிறோமா என அந்த ஆலையின் தலைவர் செர்ஜி லிபினை கடிந்து கொண்டுள்ளார்.ஆற்றில் கசிந்துள்ள அந்த 20,000 டன் டீசல் எண்ணெயானது தற்போது 350 சதுர கி.மீற்றர் அளவுக்கு பரவியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து குறித்து விசாரணைக்கு புடின் உத்தரவிட்டுள்ளார், மேலும் மின் நிலையத்தில் மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.a
No comments:
Post a Comment