மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1092 பேர் கொரோனா வைரசால் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 65 லட்சத்தைக் கடந்துள்ளதுடன்
3.87 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ 14வது இடத்தில் உள்ளது. மெக்சிகோவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1092 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் ஒரே நாளில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை கடந்திருப்பது இது முதல் முறையாகும்.
முந்தைய நாளில் 470 பேர் மட்டுமே பலியான நிலையில், தற்போது இரண்டு மடங்கிற்கும் அதிகமாக பலி எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. மொத்த பலி எண்ணிக்கை 11729 ஆக உள்ளது.
No comments:
Post a Comment