பனி சுமந்த புற்கள் களைப்படைவதில்லை
கனி சுமந்த கிளைகள்
வலியில் வருந்துவதில்லை
ஓயாமல் சிமிட்டுவதால்
இமைகள் சோர்ந்து போவதில்லை
சாயாமல் நிற்பதால் மரங்கள்
சலித்துப்போவதில்லை
இடி விழுவதால்
பூமி உடைந்துபோவதில்லை
மின்னல் வெட்டுவதால் வானம்
கிழிந்து போவதில்லை
சுழன்று கொண்டிருப்பதால்
பூமிக்கு தலை சுற்றுவதில்லை
துடிப்பதால் இதயம்
துயரம் கொள்வதில்லை
புலராத பொழுதில்லை
தேயாத நிலவில்லை
பறிக்கப்படாத மலர்கள்
மாலையாவதில்லை
நெய்யப்படாத நூல்
சேலையாவதில்லை
தோல்விகள் எவர்க்கும்
நிரந்தரமில்லை
வெற்றி என்பது
தூரமுமில்லை...
சுமைகள் சுமையல்ல
ஏற்றுக்கொள்
தோல்விகள் தோல்வியல்ல
தெரிந்துகொள்
வெற்றியை தக்கவைக்க
பழகிக்கொள்.
தடைகளை உடைத்திட
உறுதிகொள்
உன் வாழ்க்கை உன் கையில்
உணர்ந்துகொள்!!!

No comments:
Post a Comment