வடக்கு கிழக்கில்; இராணுவரீதியான மேலாதிகம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட வேண்டும். முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம்.
அரசியல் அதிகாரம் தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக அரசாங்கத்துடன் கூட்டுச் சேர வேண்டிய அவசியமே இல்லை ஆனால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபஷ;ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் இராணுவரீதியான மேலாதிகம் மட்டுமல்ல பல விடயங்கள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்றம் சிரேஷ;ட உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார். .
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இரா.துரைரெட்ணம் இவ்வாறு தெரிவித்தார்.
அரசைப் பொறுத்த மட்டில் கடந்த ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய கால கட்டங்களில் மத்திய அரசாங்கத்துடன் தமிழ் பிரதிநிதிகள் சலுகைகளா? உரிமைகளா ? என்ற விடயத்தில் உரிமைகளை பாதுகாத்து வந்தனர் 2009 ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலகட்டங்களில் தமிழர்கள் வடக்கு கிழக்கில் தலைநிமிர்ந்து வாழப்பட வேண்டுமாயின் உள்ளூராட்சி சபையில் , மாகாணசபை முறைமையில் , மத்திய அரசாங்கத்தில் அரசியல் ஸ்தானம் ஆழமாக பதியப்படவேண்டும்
அவ்வாறே ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் பயனுள்ளதாக மாற்றப்பட வேண்டும் இதற்கு உருவாக்கப்படுகின்ற தமிழ் தலைமைகள் உருவாக்கப்படுகின்ற அரசாங்கத்துடன் பேசி ஒரு உடன்பாட்டிற்கு வரவேண்டும்
அரசியல் அதிகாரம் தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக அரசாங்கத்துடன் கூட்டுச் சேர வேண்டிய அவசியமே இல்லை காரணம் வடக்கு கிழக்கில் 40 வருட யுத்தம் ஆயுத ரீதியான போராட்டத்துக்கு வழிவகுத்து பல தியாகங்களை செய்து பல்லாயிரக் கணக்கான போராளிகள் மரணித்து சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் வடக்கு கிழக்கில் அரசியல் பொருளாதார ரீதியாத தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன
அதை நாங்கள் மௌனிக்க சென்று விடாமல் அப்படிப்பட்ட தியாகங்களை கொச்சைப்படுத்தி விடாமல் எதிர்காலத்தில் அரசியல் ரீதியான. நிர்வாக ரீதியாக ஏனைய கலாச்சார ரீதியாகவும் தமிழர்கள் புறக்கணிக்ப்படாமல் இருப்பதற்கான ஒரு தமிழ் தரப்பிலான தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கும். உருவாக்கப்படவுள்ள புதிய அரச முறைக்குட்டபட்ட விடயங்களில் அரச நிறுவத்தையும் அபிவிருத்தி பொருளாதாரத்தையும் அமுல்படுத்துவதற்கு தமிழர்கள்; பங்கு தாரர்களாக மாறவேண்டும் என்பதற்காக வருகின்ற அரசாங்கத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு; பேச்சுவார்த்தையில் ஈடுபட்டே ஆகவேண்டும்; இது தான் கிழக்கிலுள்ள சூழ்நிலை
அதேவேளை புனித பாதை யாத்திரை என்பது தங்களுடைய நேத்திக்கடன்களை தீர்த்துவைப்பதற்கும் கலாச்சாரரீதியான வணக்கங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கு பாதையாத்திரை அவசியமாகும் இந்த விடயத்துக்கு பௌத்தசாசனத்துக்கு ஒரு பக்கசார்பும் ஏனைய கலாச்சாரங்களுக்கு ஒருபக்கச் சார்பும் இலங்கையில் அமுல்படுத்தப்படுகின்றதா சந்தேகம் தமிழர்கள் மத்தியில் இருக்கின்றது எனவே அரசு பக்கசார்பாக செயற்படாக் கூடாது
தென்னிலங்கையில் ஆட்டோசங்க தலைவரின் படுகொலையை மட்டக்களப்பு ஆட்டோ சாரதிகள் சார்பாக வண்மையாக கண்டிப்பதுடன் இந்த நுன்கடன் வழங்கும் நிதிநிறுவனங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினத்துடன் இந்த நுன்கடனை வழங்கிவிட்டு தொலைக்காட்சி பெட்டி, ஆட்டோ, மோட்டர்சைக்கிள், வாகனங்கள் மற்றும் ஏனைய பொருட்களை பணம் கட்டாமல் கொண்டு செல்வதை உடன் நிறுத்தப்படவேண்டும் என்றார் .
--
No comments:
Post a Comment