ஆயிரம் கட்டெறும்புகள்
வந்து வளைக்கும்
இனிப்பு பண்டம்....
ஈசல் கிளைகள் வந்து மொய்க்கும்
ராத்திரி நேர தெருவிளக்கு .....
நிர்வாண கலையை
நிர்வாகம் செய்யும் பாதையோர பொம்மைகள் ....
பசித்தோருக்கு எய்ட்சை ருசிக்க கொடுக்கும்
விருந்து வழங்கிகள்.....
இருட்டறைக்குள் பூஜை நடத்தும்
விசேட பக்தர்கள்....
கணவன்மார்களை அடிக்கடி
மாற்றிக் கொள்ளும் முதிர்கன்னிகள்...
தூசி என நினைத்து
உடலை காசுக்காக விற்றுப்
பிழைக்கும் வேசிகள்........
பணம் படைத்த ஆதாரங்களை தேடி
பூமியில் அலையும் அவர்களின் மறுபிறப்புக்கள் ......
நன்றி - ''எழுதுகோலும் வெள்ளைத் தாளும்''
No comments:
Post a Comment