மயானத்துக்கு
வழிகாட்டும் அட்ரஸ்..
மரணத்துக்காக விண்ணப்பிக்கும்
அப்பிளிகேஷன்..
கடந்த காலத்தைப் பற்றிய பாடும்
டேமேட்ச் விழுந்த கேசட் பீஸ்..
நிமிஷ கரையான் அரித்த வீடு
இயற்கையின் விளையாட்டால்
காலாவதியான ஓடு...
காலத்தின் கோலத்தால்
காட்சிக்கு வந்த கார்ட்டூன் படம்...
வாழ்க்கை நாடகத்தில் வரையறுத்து
வழங்கப்பட்ட கடைசி பாத்திரம்...
காலன்......... இதன் காதலன்
மருந்து மாத்திரை இதற்கு பாதுகாவலன்
வியாதிகளின் மேய்ச்சல் நிலம் ...
பேரப்பிள்ளைகளுக்கு நீச்சல் குளம்
ஊன்றுகோல் உதவும் கால்
கண்ணாடி எங்கு உயிர்நாடி ....
இங்கே இருமல் தடுமல்
தொய்வு எல்லாம் இலவசம்
மாரடைப்பு மரணத்துக்கான அழைப்பு ...
மொத்தத்தில் முதுமை
அனுபவ படிப்புக்கு
இறைவன் எழுதிய தலைப்பு ....நன்றி -
''எழுதுகோலும் எனது வெள்ளைத்தாளும்...''
No comments:
Post a Comment