நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளரும் தற்போதைய பதில் தவிசாளருமான ஏ கே ஏ சமட் அவர்கள் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாக ஊடகங்களில் பொய்யான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது
இதுதொடர்பாக அவரை தொடர்பு கொண்டபோது.
அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளராகவும் தற்போது ஆட்சியில் உள்ள பொது ஜன பெரமுன அரசாங்கத்தின் ஆதரவாளராகவும் செயற்பட்டு வருவதாகவும். தான் இவ்வாறான இணைக் கட்சிகளில் ஒருபோதும் சேரப் போவதில்லை எனவும் சேர வேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனவும் தனது கருத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தான் இவ்வாறான கட்சிகளில் முன்பு ஒரு காலமும் இருந்ததில்லை எனவும் இனியும் இருக்கப் இருக்கப் போவதில்லை எனவும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும்
பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் தனது முழுமையான ஆதரவை தெரிவிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்
அத்துடன் இவ்வாறான பொய்யான வதந்திகளை பரப்பும் ஊடகங்களுக்கு எதிராக தனது வன்மையான கண்டனத்தையும் கடுமையான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment