சிங்கப்பூரின் தகவல், தொடர்புத் துறையில் சிங்கப்பூரர்களைப் பணியமர்த்த சுமார் 5,500 இடங்கள் உருவாக்கப்படும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் S. ஈஸ்வரன் கூறியுள்ளார்.
மின்னிலக்கத் துறையில் உள்ள வாய்ப்புகளை ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் தொடர்ந்து உதவும் என்றார் அவர்.
கொரோனா கிருமிப்பரவல் காரணமாக சிங்கப்பூர்ப் பொருளியல் நலிவடைந்தாலும் தகவல் தொடர்பு, தொழில்நுட்பத்துறை தொடர்ந்து நம்பிக்கை தரக்கூடிய துறையாக இருப்பதை அமைச்சர் ஈஸ்வரன் சுட்டினார்.
பல்வேறு துறைகள் தற்போது மின்னிலக்கத் தீர்வுகளை நாடி வருகின்றன.
அவற்றின் தேவைகளை மின்னிலக்கமும் தொழில்நுட்பமும் நிறைவேற்ற உதவும் என்று திரு. ஈஸ்வரன் சொன்னார்.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் தகவல், தொடர்பு, தொழில்நுட்பத்துறை கிட்டத்தட்ட மூன்றரை விழுக்காடு வளர்ச்சி கண்டது.
அதன் மூலம் சுமார் 1,100 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
நோய்ப்பரவல் சூழலுக்குப் பிந்திய காலத்தில் தகவல்,தொடர்பு, தொழில்நுட்பத்துறை சற்றுப் பின்னடைவை எதிர்கொள்ளலாம்.
அதை முன்னிட்டு தனியார் நிறுவனங்களில் சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க, அரசாங்கம் தனியார் துறையுடன் இணைந்து செயல்படுகிறது.
அடுத்த சில ஆண்டுகளில் நிறுவனங்கள் வழிநடத்தும் பயிற்சித் திட்டங்கள் மூலம் ஏறக்குறைய 3,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் ஈஸ்வரன் சொன்னார்.
No comments:
Post a Comment