1MDBயின் பிரிவான SRC internationalஇல் இருந்து 10 மில்லியன் டாலரைத் திரு. நஜிப் முறைகேடாகப் பயன்படுத்தியதாய்க் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கிற்கான தீர்ப்பு அது.
மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான 1MDB நிதியில் செய்யப்பட்ட மோசடிகள் தொடர்பில் திரு. நஜிப் மேலும் சில குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, நம்பிக்கை மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது ஆகியவை தொடர்பில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
66 வயதாகும் திரு. நஜிப், விரிவானதொரு மோசடிச் சதி வலையில் சிக்கிக்கொண்டதாக அவரது வழக்குரைஞர் வாதிட்டார்.
தமது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட அந்தத் தொகை அரபு நாட்டிலிருந்து பெறப்பட்ட நன்கொடை என்றே திரு. நஜிப் நம்பியதாக வழக்குரைஞர் குறிப்பிட்டார்.
மலேசியா: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான வழக்கில் அடுத்த மாத இறுதியில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
No comments:
Post a Comment