பிரான்சில் சுகாதார அவசர நிலை அக்டோபர் வரை நீட்டிக்கப்படலாம் என அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஜூன் மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி விவாதிக்க இருக்கிறார்கள்.
அப்படி அவசர நிலை நீடிக்கப்படும் பட்சத்தில், மக்கள் நலனுக்கான முடிவுகளை எடுக்க தொடர்ந்து அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கும்.
அத்துடன், சட்டங்கள் நாடாளுமன்றம் முன் கொண்டு செல்லப்பட்டு விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்படுவதற்கு பதிலாக அவை விரைவாக நிறைவேற்றப்பட முடியும்.
இதுவரை, அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஒரு திகதியை அரசு முடிவு செய்யவில்லை.
ஒருவேளை அது அக்டோபர் வரை இருக்கலாம் என பரிந்துரைதான் செய்யப்பட்டுள்ளது. ஆனால் செனட் கலைக்கப்படும்பட்சத்தில், அது நவம்பர் வரை கூட நீட்டிக்கப்படலாம்.
No comments:
Post a Comment