அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிரதமருடன் இறுதியாக பேசிய விடயம்....! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

புதன், 27 மே, 2020

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிரதமருடன் இறுதியாக பேசிய விடயம்....!

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு செய்தி அறிந்ததை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு தலங்கம வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.

அவரின் மறைவு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும், குறிப்பாக மலையக மக்களுக்கும் பேரிழப்பு என அங்கு செய்தியாளர்களிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அத்துடன், இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பளம் அதிகரிப்பு குறித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் எனவும் பிரதமர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் ஆறுமுகன் தொண்டமான் வலியுறுத்தியதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஆறுமுகன் தொண்டமான் தன்னுடன் பேசிய இறுதி நிமிடங்கள் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சிணைகள் குறித்தது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகரை சந்தித்த ஆறுமுகன் தொண்டமான் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 100000வீடமைப்பு திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னைய வீடமைப்பு திட்டங்களில் காணப்பட்ட குடிநீர்,மின்சாரம் தொடர்பான குறைபாடுகளை எதிர்வரும் காலங்களில் எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடிதாகவும் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.