கொரோனா தொற்றினால் சிங்கப்பூரில் இதுவரை 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 22 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறிய நாடான சிங்கப்பூர் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு தவறுவதலாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அங்குள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நோயாளிகளுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனையில் நே ர்மறை என வந்துள்ளதாக 357 கொரோனா நோயாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு சிங்கப்பூர் அரசு தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப அமைப்பின் செயல்திறனை மேம்படுத்த முயன்ற போது, ஏற்பட்ட கோளாறு காரணமாக தவறுதலாக குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதாரத்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நோயாளிகளுக்கு பதற்றம், அச்சம் ஏற்பட காரணமாக இருந்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த இரண்டு பேருக்கு குறுஞ்செய்தி வந்ததாக சிங்கப்பூர் ஊடகம் ஒன்றுக்கு தகவல் கிடைத்துள்ளது.
மருத்துவ பரிசோதனையில் எதிர்மறை என வந்து வீடு திரும்பிய பிறகு, இதுபோன்ற குறுஞ்செய்தி வந்ததால் மிகவும் அச்சமடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் குணமடைந்தவர்களுக்கு இந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக சிங்கப்பூர் அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment