சர்வதேச ரீதியில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதி வரையில் 10 ஆயிரத்து 370 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் மெக்ஸிக்கோ நாட்டிலேயே அதிகளவானவர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
மெக்ஸிக்கோவில் புதிதாக 3 ஆயிரத்து 455 பேருக்கு கொரோன தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 501 பேர் பலியாகியுள்ளனர்
இதற்கமைய மெக்ஸிக்கோ நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 560 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரை 8 ஆயிரத்து 334 பேர் பலியாகியுள்ளனர்.மெக்ஸிக்கோவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் புதிதாக 2 ஆயிரத்து 147 பேருக்கு கொரோன தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 44 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கமைய பிரேசில் நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 94 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரை 24 ஆயிரத்து 593 பேர் பலியாகியுள்ளனர்.
இதேவேளை, சர்வதேச ரீதியில் கொரோன தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 56 லட்சத்து 88 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் இதுவரை 352 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
எனினும் சர்வதேச ரீதயில் கொரோனா வைரஸ் தொற்றியாகியிருந்த 24 லட்சத்து 31 ஆயிரத்து 796 பேர் பூரணமாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment