நாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, October 22, 2020

நாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..நாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020 அன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது எதுவித திருத்தமுமின்றி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இது தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றிய அன்னமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் கௌரவ. தி. யோகநாயகன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்...

எமது பிரதேச சபை செயற்படத் தொடங்கிய 2006ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாண்டு வரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டங்களில் கௌரவ உறுப்பினர்கள் எவருக்கும் எதுவித நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்படவில்லை இப்போது கௌரவ. தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களின் முன்மொழிவுகள் உள்வாங்கப்பட்டு இவ் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து உறுப்பினர்களினதும் ஆலோசனைகள் கருத்திற் கொள்ளப்பட்டு 2020.09.02 இல் தவிசாளராக தெரிவாகிய கௌரவ.அ.ஆனந்தன் அவர்களின் தலைமையில் முன்னெடுத்துச் செல்லப்படும் குறுகிய கால ஆட்சியில் எமது பிரதேசம் பல்வேறு வழிகளிலும் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை எய்தியுள்ளது மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை உள்ளடக்கி இவ் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதன்பின் கௌரவ உறுப்பினர்களின் உரையைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது அனைத்து உறுப்பினர்களும் கைகளை உயர்த்தி தங்களின் ஆதரவை தெரிவித்து வரவு செலவுத் திட்டமானது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டது. இதில் சுயேட்சை குழுவைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் (TNA) 5 உறுப்பினர்கள், இலங்கை சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஒருவருமாக ஆதரவளித்து 2020 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது,

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.